பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி படங்களில் நடிக்க கமிட்டானதில் இருந்தே அனுஷ்காவுக்கு பல வாள் சண்டை, குதிரையேற்றம் என பல பயிற்சிகளை அளித்து வருகிறார்கள் அப்படங்களின இயக்குனர்கள். இதில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும பாகுபாலி படத்தில் நடிக்கும் அனுஷ்கா உள்பட அப்படத்தில் நடிக்கும் சிலருக்கு தினமும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வைத்தே படப்பிடிப்பை தொடங்குகிறாராம் இயக்குனர்.
ஆனால், இப்படி மாதக்கணக்கில் அனுஷ்கா செய்து வந்த உடற்பயிற்சியை யாரோ வீடியோவில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டு விட்டனர். இதை படம் திரைக்கு வரும நேரத்தில், அனுஷ்கா இந்த படத்துக்காக செய்த தியாகங்களாக சொல்லி வெளியிட்டு பப்ளிசிட்டி தேடிக்கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்த ராஜமவுலிக்கு இது பெரிய அதிர்ச்சியாகி விட்டது.
ஆனால் இப்போது தனக்கே தெரியாமல் அந்த உடற்பயிற்சி வீடியோக்கள் வெளியாகி விட்டதால், இனியும் தாமதிக்க வேண்டாம் என்று தான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அனுஷ்கா வியர்வை சொட்ட சொட்ட செய்த உடற்பயிற்சியே பாகுபாலி படத்தில் அவரது உழைப்புக்கு சான்று என்றும் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.