இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கற்றது தமிழ் படத்தை இயக்கிய ராம் அதன்பிறகு இயக்கிய படம் தங்க மீன்கள். அப்பா-மகளுக்கிடையிலான பாச உணர்வுகளை மையப்படுத்தி இப்படம் உருவானது. இதில் படத்தை இயக்கிய ராம் நாயகனாகவும், சாதனா என்ற சிறுமி மகளாகவும் நடித்திருந்தனர். இப்படத்தை முதலில் டைரக்டர் கெளதம்மேனன்தான் தயாரித்தார்.
அந்த கதையை கேட்ட அவர், இதில் அப்பா வேடத்துக்கு நீங்கள்தான் பொருத்தமாக இருப்பீர்கள் என்று டைரக்டர் ராமையே நாயகனாக நடிக்க வைத்தார். ஆனால், கடைசி நேரத்தில் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கிய கெளதம்மேனன், படத்தை கைமாற்றி விட்டார். அதனால் அதன்பிறகு அப்படத்தை ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் தயாரித்தார்.
அதையடுத்து திரைக்கு வந்த தங்கமீன்கள் படம் கமர்சியல்ரீதியாக பெரிய சக்சஸ் இல்லை என்றாலும் நல்ல படம் என்கிற பெயரை சம்பாதித்தது. அதோடு, இந்திய அரசு சிறந்த படம் என்று தேசிய விருது அளித்தது. பின்னர், மேலும் பல விருதுகளும் அப்படத்துக்கு கிடைத்து.
இந்த நிலையில், தற்போது பாண்டிச்சேரி அரசும் தங்கமீன்கள் படத்தை சிறந்த படமாக தேர்வு செய்திருக்கிறது. செப்டம்பர் மாதம் நடைபெறும் விழாவில் தங்கமீன்கள் படத்துக்கு கேடயமும், ஒரு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்பட உள்ளதாம்.