சிவகார்த்திகேயன் படத்துக்கு கமல் பட டைட்டில்?
21 ஜூன், 2014 - 13:11 IST
கெளதம்மேனன் இயக்கத்தில், அஜீத் நடித்து வரும் அவரது 55-வது படத்துக்கு இதுவரை பெயர் வைக்கவில்லை. ஆனால், அந்த படத்தில் போலீஸ் அதிகரியாக நடிக்கும் அஜீத்தின் பெயர் சத்யதேவ் என்பதால், சத்யா என்று பெயர் வைக்கும் யோசனையில் இருக்கிறார் கெளதம்மேனன். இதே தலைப்பில் ஏற்கனவே கமல் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மான்கராத்தே படத்தில் நடித்த சிவகார்த்திகேயன். அதையடுத்து எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கும் டாணா படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். தனுஷ் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நாயகி ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்திற்கு டாணா என்ற டைட்டில் வைத்து பெரிய அளவில் ரீச்சாகி விட்டது. இருப்பினும், இப்போது இந்த டைட்டீல் மாற்ற முடிவெடுத்திருக்கிறார்களாம். எதிர்நீச்சலில் ஓட்டப்பந்தயம், மான்கராத்தேயில் பாக்சிங் கதைக்களங்களில் நடித்த சிவகார்த்திகேயன் இப்படத்தில் போலீசாக துடிக்கும் ஒரு இளைஞனைப்பற்றிய கதையில் நடிக்கிறாராம்.
அதனால், இதற்கு காக்கி சட்டை என்ற தலைப்புதான் பொருத்தமாக இருக்கும் என்று இப்போது முடிவு செய்திருக்கிறார்களாம். இதே டைட்டீலில் ஏற்கனவே கமல் நடித்திருக்கிறார் என்பதால், செண்டிமென்ட்டாக இந்த டைட்டில் ஒர்க்அவுட் ஆகும் என்பதும் அந்த டீமின் நம்பிக்கையாக உள்ளதாம். அதனால் விரைவில் இந்த தலைப்பினை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்களாம்.