ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விளம்பர படங்களை இயக்கி வந்த அஜித் ரவி பிகாசஸ் இயக்கும் முதல் திரைப்படம் தொட்டால் விடாது. தயாரிப்பாளரும், ஹீரோவும் அவர்தான். சனம் ஷெட்டி, நான்சி குப்தா, மான்யா என்ற மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதில் நான்சி குப்தா மிஸ் நார்த் இண்டியன் பட்டம் பெற்றவர்.
இதுபற்றி இயக்குனர் அஜித் ரவி பிகாசஸ் கூறியதாவது: இது ஒரு திரில்லர் மூவி. நட்பு எப்போதும் முடிவதில்லை, காதல் எப்போதும் சாவதில்லை என்கிற கருத்தை மையமாக கொண்டது. துபாயில் நல்ல வேலையில் இருக்கும் ஹீரோ தன் நண்பர்களுக்காக கிராமத்துக்கு வந்த தொழில் தொடங்குகிறான். நண்பர்களுக்குள் வரும் ஒரு பெண்ணால் அவர்கள் வாழ்க்கையே திசைமாறிப்போகிறது. இதுதான் படத்தின் கதை. சனம் ஷெட்டிதான் ஹீரோயின். மிஸ் நார்த் இந்தியா டைட்டில் வென்ற நான்சி குப்தா இதில் மாடலிங் பெண்ணாகவே நடித்துள்ளார். தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கிறது.