சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
கார்த்தி தற்போது நடித்து வரும் படம் மெட்ராஸ். அட்டக்கத்தி ரஞ்சித் இயக்குகிறார். தெலுங்கு நடிகை கேத்ரினா தெரசா ஹீரோயின். இந்தப் படத்தின் கதை நானே தேடிப்போய் விரும்பி தேர்வு செய்த கதை என்கிறார் கார்த்தி. அவர் மேலும் கூறியதாவது:
தொடர்ந்து காமெடி படங்கள் பண்ணி போரடிச்சுப்போச்சு. காமெடி எனக்கு செட்டாகலேங்குறதும் தெரிஞ்சு போச்சு. அதான் ஒரு சீரியசான கதை தேடிட்டிருந்தேன். அப்பதான் எல்லா அம்சங்களும் நிறைந்த ஒரு நார்த் மெட்ராஸ் கதையோட என்கிட்ட வந்து கதை சொன்ன ரஞ்சித் இதை புதுமுகங்களை வச்சி எடுக்கலாமுன்னு இருக்கேன் கதை எப்படி இருக்குன்னு கேட்டார். இதுல நானே நடிக்கிறேனேன்னு சொன்னேன். அப்போ உங்களுக்கு ஏத்த மாறி கொஞ்சம் மாத்திகிட்டு வர்றேன்னு சொன்னார். நானே தேடிப்போயி அவருடன் உட்கார்ந்து கதையை பைனல் பண்ணிட்டு வேலைய ஆரம்பிச்சிட்டோம்.
வடசென்னை என்றாலே கொலை கொள்ளை, ரத்தம், கலவரம்னுதான் படம் வந்திருக்கு. ஆனா அதையும் தாண்டி அங்கு சந்தோஷமா வாழ்ற மக்கள் இருக்காங்க. அந்த மக்களை பற்றின கதை. மற்றதும் இருக்கும். ஆனா நேரடி காட்சியாக இருக்காது. அதை உணர வைக்கும் காட்சிகளா இருக்கும். காளிங்ற கேரக்டரை எனக்கு ரொம்ப புடிச்சி நடிக்கிறேன். 30 ரூபா டிராக் பேண்ட், ஒரு பனியன், சிவப்பு கலர் செருப்பு இதுதான் என்னோட காஸ்ட்யூம். நிச்சயமா இது ரசிகர்களுக்கு நெருக்கமான படமா இருக்கும். என்கிறார் கார்த்தி.