போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
மிஷ்கின் தற்போது இயக்கி வரும் படம் பிசாசு. தயாரிப்பாளர் ரமேஷின் மகன் நாகா ஹீரோவாகவும். மலையாள டான்சர் பிரயகா ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். பி
ஸ்டூடியோ சார்பில் பாலா தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு இசை அமைக்க இளையராஜாவை மிஷ்கின் கேட்டதாகவும். அதற்கு இளையராஜா மறுத்து என் ரிக்கார்டிங் தியேட்டருக்குள் வராதே என்று விரட்டியடித்தாகவும் கூறப்பட்டது.
இதனை மிஷ்கின் மறுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்த செய்தி தவறானது. இதுவும் ஒரு கிசுகிசு அவ்வளவுதான். நானும் இசைஞானியும் தனி அறைக்குள் பேசிக் கொண்டது எப்படி மூன்றாவது நபருக்குத் தெரியமுடியும். இசைஞானியை சந்தித்து பிசாசு படத்தில் ஒரு இளைஞனை இசை அமைக்க வைக்கப்போகிறேன்னு சொன்னேன் அவரும் சரி பண்ணு என்றார். அவ்வளவுதான். மற்றபடி வேறெதும் பேசிக் கொள்ளவில்லை.
அருள் என்ற இளைஞனைத்தான் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்துறேன். அவன் பெயரை மாற்றி வைக்கச் சொன்னதால் அரோல் குரோலின்னு அவனுக்கு பெயர் வச்சிருக்கேன். குரோலி இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற வயனிலிஸ்ட். அருளும் சிறந்த வயலினிஸ்ட். என்கிறார் மிஷ்கின்.