Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

150வது படம் - சிரஞ்சீவியின் சம்பளம் எவ்வளவு ?

20 ஜூன், 2014 - 14:18 IST
எழுத்தின் அளவு:

தெலுங்கு மெகா ஸ்டாரான சிரஞ்சீவி ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க முடிவெடுத்துள்ளார். அடுத்து அவர் நடிக்கப் போகும் படம் அவருடைய 150வது படம் ஆகும். இந்த படத்திற்காக சிரஞ்சீவி எவ்வளவு சம்பளம் வாங்குவார் என்பதுதான் இப்போது அவருடைய ரசிகர்கள் பேசி வரும் கேள்வியாக உள்ளது. தெலுங்குத் திரையுலகத்தைப் பொறுத்தவரை சிரஞ்சீவி நடித்தவரையில் சம்பளம் வாங்குவதில் அவர்தான் மற்ற ஹீரோக்களை விட அதிகமான சம்பளம் வாங்கி வந்தார். கடைசியாக அவர் வாங்கிய சம்பளம் சுமார் 8 கோடி ரூபாய் என்கிறார்கள். அப்போது அவருக்கு அடுத்ததாக சுமார் 4 கோடி வரையில் சம்பளம் வாங்கியிருக்கிறார்கள். இதெல்லாம் ஏழு ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம்.


இப்போது அதை விட நான்கைந்து மடங்கு சம்பளம் உயர்ந்து விட்டது. அப்படியென்றால் சிரஞ்சீவியின் தற்போதைய சம்பளம் எவ்வளவாக இருக்கும் என்பதே கேள்வி. தற்போது பவன் கல்யாண், மகேஷ் பாபு போன்ற ஹீரோக்கள் சுமார் 20 கோடி வரை சம்பளம் பெறுகிறார்களாம். அப்படியென்றால் சிரஞ்சீவியின் சம்பவளம் சுமார் 27 கோடி முதல் 30 கோடி வரை இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த் அளவிற்கு சிரஞ்சீவியும் சம்பளம் வாங்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.


ஆனால், ரஜினிகாந்தின் தற்போதைய சம்பளம் எவ்வளவு என்பது இதுவரை இங்குள்ளவர்களுக்கும் தெரியாது. முன்பெல்லாம் ரஜினிகாந்த் சம்பளத்துடன் ஒரு குறிப்பிட்ட ஏரியாவை வாங்கிக் கொள்வார் என்பார்கள். ஆனால், சமீப காலமாக அவர் படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்கிறார் என்றும் சொல்கிறார்கள். ஆக, அது பற்றி சரியாகத் தெரியாத நிலையில் சிரஞ்சீவியின் சம்பளத்தை ரஜினிகாந்தின் சம்பளத்தோடு ஒப்பிடுவதே தவறு. மேலும் 'எந்திரன் 2' உருவாக உள்ள நிலையில் அந்த படத்தின் பட்ஜெட்டே 250 கோடி வரை ஆகும் என்கிறார்கள். அப்படியென்றால் அதில் ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவாக இருக்கும். கூட்டிக் கழிச்சிப் பார்த்தாலும் கணக்கு சரியா வராது….?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in