Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்னும் நான் 10 லட்சத்தை கூட முழுசா பார்க்கல! -சரண்யாமோகன் புலம்பல்

19 ஜூன், 2014 - 15:53 IST
எழுத்தின் அளவு:

தனுஷ்-நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தவர் சரண்யா மோகன். அக்காவின் காதலரான தனுஷை ஒருதலையாக காதலிப்பது போல் சிறப்பாக நடித்திருந்தார் சரண்யாமோகன். அதன்காரணமாக, அதையடுத்து தான் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அவரை கதாநாயகி ஆக்கினார் சுசீந்திரன். அப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்த சரண்யாமோகன் அதன்பிறகு அதே சுசீந்திரன் இயக்கிய அழகர் சாமியின் குதிரை படத்தில் அப்புக்குட்டிக்கு ஜோடியாகவும் நடித்தார்.


ஆனால், அவர் நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதோடு, அதையடுத்து பல படங்களில் நடித்தும் சரண்யாமோகனின் மார்க்கெட் மட்டும் அப்படியே இருக்கிறது. அவருக்குப்பிறகு வந்த லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகளெல்லாம் 50 லட்சம், ஒரு கோடி என்று சம்பளம் வாங்கிக்கொண்டிருக்க இவர் மட்டும், இன்னமும் சில லட்சங்களிலேயே நின்று கொண்டிருக்கிறார்.


இதுபற்றி சரண்யா மோகனைக்கேட்டால், நடிப்புக்காக எந்த தியாகமும் செய்ய நான் தயார். அதேசமயம், கிளாமராக மட்டும் என்னால் நடிக்க முடியாது. மற்றபடி நடிப்பில் யாருக்கும் நான் குறைந்தவள் அல்ல. ஆனபோதும், என்னை இன்னும் புதுமுக நடிகைகள் போன்றே சினிமா உலகம் பார்க்கிறது. சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆனபோதும் இன்னும் நான் 10 லட்சத்தைகூட முழுசாக பார்க்கவில்லை. அதுதான் வேதனையாக உள்ளது என்கிறார் சரண்யாமோகன்.


ஆனால், நல்ல அழகான திறமையான நடிகை சரண்யாமோகன் அவரை எதற்காக இப்படி ஓரங்கட்டுகிறார்கள் என்று சினிமா வட்டாரங்களில் விசாரித்தால், திறமையான நடிகைதான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் குள்ளமான நடிகையாக இருக்கிறாரே அதுதான் அவருக்கு பெரிய பிரச்னையே என்கிறார்கள். மேலும், எந்தவொரு ஹீரோவுக்கும் அவர் பொருந்தமாட்டார். ஒரு ஷாifடைகூட ஹீரோவுடன் அவரை நிறுத்தி எடுக்க முடியாது. காரணம், அவர்களின் இடுப்புக்குதான் இவர் இருப்பார். அதனால் நெருக்கமான காட்சிகளை குளோசப் ஷாட்டாக வைத்து, அப்போது சரண்யாமோகனை ஸ்டூலில் நிற்க வைத்துதான் படமாக்க வேண்டியுள்ளது. அதனால்தான் அவரது உயரம் மாதிரியே அவரது மார்க்கெட்டும் வளர்சசியே இல்லாமல் இருக்கிறது என்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in