ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிம்புவும், தனுஷும் நண்பர்களாகிவிட்டதாக சொல்லிக்கொண்டு அடிக்கடி சந்தித்து மணிக்கணக்கில் உரையாடுகிறார்கள். அவர்களின் ரசிகர்களோ இன்னும் எலியும் பூனையுமாகவே இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, சிம்புவும் தனுஷும் நண்பர்களாகிவிட்டதை அவர்களது ரசிகர்கள் இன்னமும் கூட நம்பத்தயாராக இல்லை. இதில் ஏதோ உள்குத்து இருப்பதாகவே சந்தேகப்படுகின்றனர். அதன் காரணமாகவோ என்னவோ, டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தனுஷை பற்றி சிம்பு ரசிகர்களும், சிம்பைவுப் பற்றி சிம்பு ரசிகர்களும், ஏடாகூடமாக ஸ்டேட்டஸ் போட்டு சண்டைபோட்டுக்கொள்கிறார்கள்.
தனுஷ் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதுகுறித்து சிம்பு ரசிகர்களும், சிம்பு ரசிகர்களும், கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். வேலையில்லா பட்டதாரி படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தால் சிம்பு நடித்த காளை படத்தின் பார்ட் 2 போல் இருக்கிறது என்று சிம்பு ரசிகர்கள் சொல்ல, கொதித்துப்போயிருக்கிறார்கள் தனுஷ் ரசிகர்கள். அதோடு வேலையில்லா பட்டதாரி டிரெய்லரை யுடியூபில் இதுவரை 2.25 லட்சம் பேர் பார்த்திருப்பதாக தனுஷ் ட்வீட் பண்ணியதையும் செமத்தியாய் நக்கலடித்து வருகின்றனர் சிம்பு ரசிகர்கள். தன் நண்பர் தனுஷை தன் ரசிகர்கள் கழுவி ஊற்றுவதை கர்ம சிரத்தையாய் கவனித்துக்கொண்டிருக்கிறார் சிம்பு.