ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சரத்குமார் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் சண்டமாருதம். ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். மேஜிக் பிரேமுடன் இணைந்து ராதிகா தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சரத்குமாருடன் அவ்னிமோடி, சரயு என்ற இரு ஹீரோயின்கள் நடிப்பதாக இருந்தது. தற்போது அவ்னிமோடி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஓவியா நடிக்க இருப்பதாக பட வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
குஜராத்தை சேர்ந்த அவ்னிமோடி நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடித்தவர். தற்போது இரண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார். அந்த படத்தின் தேதியும், சண்டமாருதம் தேதியும் ஒத்துவராததால் அவர் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவ்னி மோடி அதிக சம்பளம் கேட்டதால் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சரத்குமார் சீனியர் நடிகர் அவருடன் நடித்தால் பிறகு இளம் ஹீரோக்கள் தங்களுடன் நடிக்க வைக்க தயங்குவார்கள் என்று சிலர் அவருக்கு எடுத்து சொன்னதாவும் அதனால் அவர் சம்பள பிரச்னையை காரணம் காட்டி விலகியதாகவும் கூறுகிறார்கள்.