Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத்தை முற்றுகையிட்ட மலேசிய ரசிகர்கள்!

18 ஜூன், 2014 - 17:50 IST
எழுத்தின் அளவு:

எனக்கு ரசிகர் மன்றங்களே வேண்டாம் விட்டு விடுங்கள் என்று அஜீத் ஓடி ஒழிந்தாலும் அவரை ரசிகர்கள் விடுவதாக இல்லை. நாளுக்கு நாள் அவருக்கான ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதோடு, விஜய் ரசிகர்களுடன் அவ்வப்போது பலப்பரீட்சையும் நடத்துகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியாவிலும் அஜீத்துக்கு ரசிகர்கள் பரவிக்கிடக்கிறார்கள்.


கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் 55வது படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் நடந்தபோது, தினம் தினம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் படப்பிடிப்பை முற்றுகையிட்டனர். இதனால், படப்பிடிப்புக்கே இடையூறு ஏற்பட்டு சில நாட்களிலேயே படப்பிடிப்பை நிறுத்திய கெளதம்மேனன் பின்னர், ரசிகர் நடமாட்டம் இல்லாத பகுதிகளாகப்பார்த்து படமாக்கினார்.


ஆனால் தற்போது சென்னைவாசத்தை முடித்து விட்டு அஜீத்துடன் மலேசியா பறந்துள்ளது கெளதம்மேனன் யூனிட், அங்குதான் அஜீத்-அனுஷ்கா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்படுகிறதாம். தனது படங்களில் எப்போதுமே ரொமான்ஸ் காட்சிகளை அதிகமாக இடம்பெறச்செய்யும் கெளதம், இந்த படத்திலும் சற்று தூக்கலாகவே காட்சிகளை வைத்திருக்கிறாராம். அந்த வகையில், இதுவரை அஜீத் நடித்த படங்களில் இந்த படத்தில் ஆக்சன் மட்டுமின்றி ரொமான்சும் ஜாஸ்தியாக இருக்குமாம்.


மேலும், அஜீத், படப்பிடிப்புக்காக மலேசியா வந்திருக்கிறார் என்று தெரிந்ததும், மலேசியாவில் வாழும் தமிழ் ரசிகர்கள் அஜீத்தை சந்தித்து போட்டோக்கள் எடுத்துக்கொண்டார்களாம். அதுமட்டுமின்றி, மலேசியா பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் அஜீத் யூனிட்டை நேரில் சென்று வரவேற்றார்களாம். ஆக, மட்டற்ற மகிழ்ச்சியுடன் மலேசியாவில் முகாமிட்டுள்ளார் அஜீத்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in