‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ரஜினி நடிப்பில், அவரது இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த படம் கோச்சடையான். இந்தியாவிலேயே முதன்முறையாக மோஷன் கேப்ட்சரிங் தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. கடந்த மே 23-ம் தேதி உலகெங்கும் ரிலீஸான கோச்சடையான் படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் வந்துள்ளன.
இந்நிலையில், கோச்சடையான் வெற்றியை சென்னையில் விருந்து வைத்து கொண்டாடியுள்ளார் இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த விருந்தில், ஏ.ஆர்.ரஹ்மான், செளந்தர்யா ரஜினிகாந்த், கோச்சடையான் படத்தின் மேற்பார்வையாளர் இயக்குநர் மாதேஷ், ரஹ்மானின் சகோதரி ரஹானா மற்றும் இப்படத்தில் பணியாற்றி கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கொண்டனர். ரஜினி மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் லிங்கா படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அவர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.