இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சினிமா நடிகர்களுடன் நடிகைகள் ஊர் சுற்றிய காலமெல்லாமல் மலையேறி விட்டது. இப்போது விளையாட்டு வீரர்களுடன் நடிகைகளை ஊர் ஊராக சுற்றிக்கொண்டு திரியும் சம்பவங்கள் தான் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான வீராட் கோஹ்லியுடன் அனுஷ்கா சர்மா சமீபகாலமாக சுற்றிக்கொண்டு திரிகிறார்.
இந்தியா மட்டுமின்றி, அவர் எந்தெந்த அயல்நாடுகளுக்கு பேட்டைத் தூக்கிக்கொண்டு கிளம்பினாலும் அவரும் பட அதிபர்களுக்கு டேக்கா கொடுத்து விட்டு ஊர் சுற்ற கிளம்பி விடுவார். அங்கே வீராட் விளையாடும் அழகை ஆடியன்சோடு அமர்ந்து ரசிப்பவர், அவ்வப்போது கிளாப்ஸ், விசில் என்று தனது ரசிப்புத்தன்மையை வெளிப்படுத்தி கொண்டேயிருப்பார். இதையடுத்து அவர்கள் லவ் ஜோடிகளாட்டம் வெளிநாட்டு கடற்கரைகளில் சுற்றிய போட்டோக்களெல்லாம் இணையதளங்களில பரவி பரபரப்பு கூட்டின.
இந்தநிலையில், அனுஷ்காவுடனான நெருக்கம், வீராட்டுக்கு புளித்து விட்டதோ என்னவோ, சமீபத்தில் ஒரு ஷாம்பு விளம்பரத்தில் இலியானாவுடன் இணைந்து நடித்ததில் இருந்து அவர் பக்கம் தாவி விட்டார் வீராட். அனுஷ்கா சர்மாவைப்போன்று விளையாட்டு தளங்களுக்கு செல்லாமல் ஸ்டார் ஹோட்டல்களுக்கு விசிட் அடித்து வீராட்டுடன் நட்பு வளர்க்கிறாராம் இலியானா. இந்த செய்தி மும்பை மீடியாக்களால் புகைந்தபோதும், வீராட்டை விலகாமல் ஜோடியாக வலம் வருகிறாராம் இலியானா.
ஆனால், வீராட் கோஹ்லி இப்படி கட்சி மாறி விட்டதால் அவர் மீது செம கடுப்பில இருக்கிறாராம் அனுஷ்கா சர்மா.