பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பூலோகம், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் படங்களில் நடித்து வரும் ஜெயம்ரவி, அடுத்து சுராஜ் இயக்கத்தில், முழுநீள காமெடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலியை அணுகினார்கள். அவரும் ஓகே சொன்னார். ஆனால் அஞ்சலி தமிழில் நடிக்க பிரச்னை இருக்கிறது. இயக்குனர் களஞ்சியம் பிரச்னை செய்வதால் அவரை நடிக்க வைத்தால் தேவையில்லாத பிரச்னைகள் வரும் என்று கருதும் சுராஜ், அஞ்சலியை நடிக்க வைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டார்.
அஞ்சலிக்கு பதிலாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. தெலுங்கில் ஒன்றரை கோடி சம்பளம் வாங்கும் காஜல், தமிழில் நடிக்க ஒண்ணேகால் கோடி கேட்பதாக கூறப்படுகிறது. என்றாலும் தொடர்ந்து காஜலுடன் பேச்சு நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே சம்பள பிரச்னை காரணமாக நண்பேன்டா படத்தை காஜல் இழந்தது குறிப்பிடத்தக்கது.