'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மேக்னஸ் சினி பிரைம் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள படம் கார்த்திகேயன். தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்தில் நிகில், ஸ்வாதி, கிஷோர், ஜெய பிரகாஷ், துளசி உள்பட பலர் நடித்துள்ளனர். சந்து இயக்கியுளள இப்படத்துக்கு சேகர் சந்திரா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று இரவு 7 மணி அளவில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. அவ்விழாவில், எடிட்டர் மோகன், டைரக்டர்கள் ராஜா, மாதேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் டைரக்டர் ராஜா பேசுகையில், எந்தவொரு தயாரிப்பாளரும் அத்தனை எளிதில் டைரக்டரை பாராட்ட மாட்டார்கள். படப்பிடிப்பு நடக்கும்போது ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டு மனக்கசப்பில்தான் இருப்பார்கள். தயாரிப்பாளர், டைரக்டரின் சொந்த அப்பாவாகவே இருந்தாலும் இதே நிலைதான்.
ஆனால், இந்த படத்தின் தயாரிப்பாளர் மல்லிகா அர்ஜூனா பேசும்போது, டைரக்டரை ரொம்ப பெருமையாக சொன்னார். அப்படியென்றால் அவர்களுக்கிடையே நல்லதொரு புரிதல் இருந்திருக்கிறது. அதோடு டைரக்டர் படமாக்கிய விதமும் அவருக்கு பிடித்திருக்கிறது அதுதான் இந்த பாராட்டுக்கு காரணம்.
மேலும், இந்த படத்தில் தெலுங்கில் 10 படங்களில் நடித்துள்ள நிகில் அறிமுகமாகிறார். சுப்பிரமணியபுரம் ஸ்வாதி நடித்திருக்கிறார். அதிலும் ஹீரோ போஸ்டரில் கையில் முருகனின் வேலுடன் நிற்கிறார். இதுவே படத்தின் வெற்றிக்கான நல்ல அறிகுறிதான். காரணம், எனது முதல் படமான ஜெயம் படத்தில் ஹீரோ ஜெயம் ரவி கையில் வேலுடன்தான் நிற்பார். அந்த படம் மெகா ஹிட்டானது. அதனால் அதே செண்டிமென்ட் இந்த படத்திலும் ஒர்க்அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.