மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஞானராஜசேகரன் தற்போது இயக்கியுள்ள படம் ராமானுஜன். கணிதமேதை ராமானுஜரின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக்கொண்டு தயாராகியுள்ள இந்த படத்தில் ஜெமினிகணேசன்-சாவித்ரியின் மகள் வழிப்பேரன் அபினய் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவரை நடித்த முதல் நாளில் இருந்தே அவருக்கு மொட்டையடித்து விக் வைத்துதான் படம் முழுக்க படமாக்கினாராம் ஞானராஜசேகரன். அடிக்கடி முடி வளர்ந்து கொண்டிருக்க அவ்வப்போது மீண்டும் மீண்டும் அவருக்கு மொட்டையடித்துக்கொண்டேயிருந்தார்களாம். அவர் மட்டுமின்றி அந்த படத்தில் நடித்த நிழல்கள் ரவி, சரத்பாபு உள்பட நூற்றுக்கணக்கான நடிகர்-நடிகைகளுக்கும் மொட்டை அடித்துதான் படப்பிடிப்பு நடத்தியுள்ளாராம்.
மேலும், ஒரு கட்டத்தில் ராமானுஜர் மேல்படிப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்று விட்டதால், அந்த காலகட்டத்தை படமாக்க நிஜமான ஹாலிவுட் நடிகர்களையே நடிக்க வைத்துள்ளார்களாம். ஆனால், வெளிநாடு சென்றபோதும் தனது கெட்டப்பை மாற்றாமலேயே ராமானுஜர் இருந்ததால், அங்கே படமாக்கியபோதும் மொட்டைத்தலையில் விக் அணிந்துதான் நடித்தாராம் அபினய்.
இதுபற்றி டைக்ரடர் ஞானராஜசேகரன் கூறுகையில், கதைப்படி மொட்டையடிக்க வேண்டும் என்று அபினயிடம் சொன்னபோது அவர் எந்த தயக்கமும் காட்டவில்லை. கதைக்காக எப்படி வேண்டுமானாலும் மாற தயாராக இருக்கிறேன் என்று சொன்னார். அதுதான் இந்த கதாபாத்திரத்தின் மீது அவர் கொண்ட ஈடுபாட்டை காண்பித்தது. அதோடு, ஒரு படத்தில் ஹீரோ மொட்டையடித்து நடிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால், தயாரிப்பாளரைத்தான் யாரும் மொட்டையடிக்கக்கூடாது என்றும் கிண்டலாக சொல்கிறார் ஞானராஜசேகரன்.