டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில், 'ஜெயம்' ரவியுடன் ''தாம் தூம்'' படத்தில் நடித்தவர் கங்கனா ரணாவத். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபகாலமாக இவர் நடித்து வரும் படங்கள் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன. அதிலும், விகாஷ் பால் இயக்கத்தில், மார்ச் மாதத்தில் இவர் நடிப்பில் ரிலீசான ''குயின்'' படம், கங்கனாவை மாறுப்பட்ட தோற்றத்தில் காண்பித்ததோடு, சூப்பர் ஹிட் படமாகவும் அமைந்தது. இப்படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய பலத்த போட்டிகள் நிலவி வந்த நிலையில் நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் பெரும் தொகை கொடுத்து இப்படத்தை வாங்கியுள்ளார்.
தற்போது, 'குயின்' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறார். இளம் இயக்குநர் ஒருவரை வைத்து இப்படத்தை இயக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.இந்தியில் கங்கனா நடித்த ரோலில் நடிக்க த்ரிஷா, காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, நயன்தாரா ஆகியோர் இடையே பலத்த போட்டிகள் நிலவி வருகிறது. இதில் சமந்தாவை நடிக்க வைக்க பலத்த முயற்சிகள் நடந்து வருகிறது. ஹீரோயினாக தேர்வாகும் நடிகை நான்கு மொழிகளிலும் நடிக்க இருக்கிறார். இன்னும் இரண்டொரு நாளில் இதுப்பற்றிய முழு அறிவிப்பையும் வெளியிட இருக்கிறார் தியாகராஜன்.