Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கத்திரி வெயிலிலும் கேரவன் கேட்காத சரண்யா மோகன்!

16 ஜூன், 2014 - 17:06 IST
எழுத்தின் அளவு:

சமீபகாலமாக ஓரிரு படங்களில் நடித்ததுமே படப்பிடிப்பு தளத்தில் தங்களுக்கு கேரவன் வசதி செய்து தர வேண்டும் என்று நடிகைகள் கெடுபிடி செய்து வருகின்றனர். அதிலும் மும்பை நடிகைகளென்றால் முதல் படத்தில் நடிக்கும்போதே கேட்கிறார்கள், வெளியூர் நடிகைகளுக்கு எப்போதுமே மவுசு கூடுதல் என்பதால் தயாரிப்பாளர்களும் உடனே அவர்களுக்கு கேரவன் அனுப்புகிறார்கள்.


ஆனால், தென்னிந்திய சினிமாவில் நடித்து வரும் சில நடிகைகள் பல படங்களில் நடித்த பிறகும் கேரவன் வசதியை எதிர்பார்க்காமல் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சரண்யா மோகன் குறிப்பிடத்தக்கவர். கேரளத்தைச்சேர்ந்தவரான இவர், தனுஷ்-நயன்தாரா நடித்த, 'யாரடி நீ மோகினி' படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தவர், அதையடுத்து சுசீந்திரன் இயக்கிய, 'வெண்ணிலா கபடிக்குழு', 'அழகர்சாமியின் குதிரை' உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.


தற்போது விஜய் நடிப்பில் ப்ரியமானவளே, வசீகரா, நினைத்தேன் வந்தாய் ஆகிய படங்களை இயக்கிய செல்வபாரதி இயக்கியுள்ள, 'காதலைத்தவிர வேறொன்றுமில்லை' என்ற படத்தில் 'சாட்டை' யுவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை செல்வபாரதியே தயாரிப்பதால் பெரிய அளவில் சம்பளமும் கேட்காத சரண்யா மோகன், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு எந்தவித ஸ்பெசல் கவனிப்புகளையும் எதிர்பார்க்கவில்லையாம்.


யூனிட் நபர்கள் சாப்பிடும் உணவுகளையே சாப்பிட்டாராம். முக்கியமாக, கத்திரி வெயில் கொளுத்தும் இடங்களில் படப்பிடிப்பு நடந்தபோதும் கேரவன் இருந்தால்தான் ஸ்பாட்டுக்கு வருவேன் எனறு சொல்லாமல், தனது உதவியாளரை குடைபிடித்துக்கொள்ளச்சொல்லி நடித்திருக்கிறார். மதிய இடைவேளைகளில்கூட ஓய்வு என்று மேக்கப் அறையில் சென்று குட்டித்தூக்கம் போடாமல், ஸ்பாட்டிலேயே நின்று நடித்துக்கொடுத்திருக்கிறார்.


சரண்யாமோகனின் இந்த அருமை பெருமைகளைப்பற்றி அப்படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் சென்னையில் நடந்தபோது தெரிவித்தார் செல்வபாரதி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in