ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கும்கி, இவன் வேற மாதிரி படங்களுக்கு பிறகு விக்ரம் பிரபு பிசியான நடிகராகிவிட்டார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அரிமா நம்பி, கவுரவ் இயக்கும் சிகரம் தொடு, மலையாளத்தில் ஹிட்டான உஸ்தாக் ஹோட்டல் ரீ-மேக்கான தலப்பாகட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்தப் படங்களுக்கு பிறகு எழில் இயக்கும் படத்தில் நடிக்கிறார். மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா என வில்லேஜ் காமெடி சப்ஜெக்ட் பாதையை பிடித்திருக்கும் எழில் அடுத்தும் அதே பாணியில் இயக்க இருக்கும் படம். இதில் வில்லேஜ் மைனராக விக்ரம் பிரபு நடிக்கிறார். அவரது முறைப் பெண்ணாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இந்தப் படத்திற்கு எழில், 'வெள்ளக்கார துரை' என்று பெயர் வைத்திருக்கிறார்.
கிராமங்களில் கொஞ்சம் வெள்ளையும், சொள்ளையுமாக திரியும் இளைஞர்களை முதியவர்கள் செல்லமாக அழைக்கும் சொல் வெள்ளக்கார துரை. அதையே படத்துக்கும் வைத்திருக்கிறார் எழில். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.