சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பிரம்மா விஷ்ணு மகேஸ்வரா உள்பட பல படங்களில் நடித்த கன்னட நடிகை ஜீவிகாவும், ஏ தில் ராமதா ஜோகி என்ற இந்திப் படத்தில் நடித்த ஆதர்ஷூம் இணைந்து காதல் பைத்தியம் என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
"காதலுக்கு தடையாக இருப்பதும் காதலை தோற்கடிப்பதும் காதலர்கள்தான். அவர்கள் சரியாக இருந்தால் காதலும் சரியாக இருக்கும். காதலித்த பிறகு வரும் குழப்பங்களும், மனமாற்றமும்தான் காதலை தோற்கடிக்க வைக்கிறது. எந்த எதிர்ப்பும் இல்லாத ஹீரோவும், ஹீரோயினும் தங்களுக்குள் உள்ள ஈகோவால் பிரிகிறார்கள். பிறகு அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்கிற கதை. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி மதுரை, ஊட்டி கேரளாவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. என்கிறார் இயக்குனர் மாசந்த்ரு.