ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் இன்னோசென்ட். மலையாள நடிகர் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். மலையாள நடிகர் நடிகைகளால் மிகவும் மதிக்கப்பட கூடியவர். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவருக்காக மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் பிரச்சாரம் செய்தார்கள்.
இன்னோசென்ட் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். மாதக் கணக்கில் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று புற்றுநோயை வென்று திரும்பினார். தான் மருத்துவமனையில் இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களை, தனது அனுபவங்களை கொண்டு புற்றுநோய் வார்டில் ஒரு -சிரிப்பு என்ற தலைப்பில் புத்தகம் எழுதினார். மரணத்தை எதிர்நோக்கி வாழ்ந்த வாழ்க்கையில் நான் எப்படி சந்தோஷமாக இருந்தேன் என்பதை அதில் எழுதியுள்ளார்.
இந்த நூலின் சில பகுதிகளை 5ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்கிறது கேரள அரசு. அதோடு கல்வி மற்று மருத்துவ ஆராய்ச்சிக்கான மாநில கவுன்சில், அந்த புத்தகத்தின் உரிமத்தை வாங்கி ஆங்கிலம் உள்ளிட்ட வேறு சில மொழிகளில் மொழிபெயர்த்து, புற்று நோளிகளுக்கு நம்பிக்கை தருவதற்காக வழங்க இருக்கிறது.