பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
2012ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்து ஹிட்டான படம் சேவகுடு. தமிழ் நடிகை சிவரஞ்சனியின் கணவரும், தெலுங்கு ஹீரோவுமான ஸ்ரீகாந்த், ஷார்மி நடித்திருந்தனர். நாசர், ப்ரதீப் ராவத், கோலிசோடா வில்லன் மதி ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருந்தார், வி.சமுத்ரா இயக்கி இருந்தார்.
இந்தப் படத்தை என்.டி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் இனி ஒரு விதி செய்வோம் என்ற தலைப்பில் தமிழில் டப் செய்து வெளியிடுகிறது. ஷார்மி படு கவர்ச்சியாக நடித்திருப்பதாலும், நாசர், ப்ரதீப் ராவத், கோலிசோடா வில்லன் மதி போன்ற தமிழுக்கு அறிமுகமான முகங்கள் இருப்பதாலும், தமிழ் இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருப்பதாலும் ஓரளவுக்கு தமிழ் லுக் படத்திற்கு இருப்பதால் டப் செய்கிறார்கள். கொடூரமான தாதா பிடியில் சிக்கி இருக்கும் மக்களை காப்பாற்றும் வழக்கமான தெலுங்கு ஹீரோ கதைதான் என்றாலும், பரபரப்பான ஆக்ஷன் காட்சிகள் விறுவிறுப்பான திரைக்கதைக்கு பெயர் பெற்ற படம். வருகிற 27ந் தேதி ரிலீசாகிறது.