ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் அஜய்ரத்தினம். மர்மதேசம், சித்தி, அண்ணாமலை, அரசி, முன் ஜென்மம் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு திரைப்படங்களிலும் நடித்தார். தில்லுமுல்லு, மாற்றான், நண்பன், சிங்கம், போக்கிரி, உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
அஜய் ரத்தினத்தின் மகன் தீர்ராஜ் விஷணுவுக்கும், அகல்யாவுக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை ஹாலில் நடந்த இந்த திருமணத்தில் நடிகர்கள் ஆர்யா, பிரபுதேவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சிவகுமார், சக்தி, இயக்குனர்கள் ஷங்கர், பி.வாசு, தயாரிப்பாளர்கள் ஏவிஎம் சரவணன், ஆர்.பிசவுத்ரி, தனஞ்செயன் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், தியேட்டர் அதிபர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். வந்திருந்தவர்களை அஜய் ரத்தினம் வரவேற்றார்.