'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமாவில் கிடைத்த வாய்ப்பை ஒரு சிலரே மிகச்சரியாய் பயன்படுத்திக்கொண்டு உயர்வை அடைகின்றனர். பல பேர் கிடைத்த வாய்ப்பை கோட்டைவிட்டுவிட்டு பிறகு வருத்தப்படுகின்றனர். அப்படி கிடைத்த வாய்ப்பை கோட்டைவிட்டவர்களில் ஒருவர்.. காமெடி நடிகர் கருணாஸ். காமெடியனாக பல படிகள் முன்னேறி இருக்க வேண்டியவர், பட விநியோகம், படத்தயாரிப்பு, ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டது என திசைமாறிப்போனார். அதோடு தன்னுடைய சாதியை முன்னிறுத்தி ஒரு சாதி அமைப்பையும் தொடங்கினார்.
நீங்கள் போகிற பாதை சரியில்லை என்று அட்வைஸ் செய்த நலம்விரும்பிகளை எல்லாம் அவமானப்படுத்தியதோடு, அவர்களை எல்லாம் ஓரங்கட்டினார். அவர் எடுத்த முயற்சிகள் அத்தனையும் தோல்வியடைந்தன. இன்னொரு பக்கம் அவர் காமெடியனாக நடித்த படங்களை மக்கள் ரசிக்கவில்லை. எனவே காமெடியன் வாய்ப்பும் குறைந்து
பட வாய்ப்பு முற்றிலும் குறைந்துபோய் கைவசம் ஒரு படம் கூட இல்லாதநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் கருணாஸ். எனவே தனக்கு அறிமுகமான இயக்குநர்கள் தயாரிப்பாளர்களை சந்தித்து சான்ஸ் கேட்க ஆரம்பித்திருக்கிறார்.