தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பவர்ஸ்டார் சீனிவாசனின் காமெடிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சினிமாவில் மட்டுமின்றி, சினிமா விழாக்களிலும் காமெடி பண்ணிக்கொண்டிருந்தவர் டுவிட்டரிலும் தன் சேட்டையை ஆரம்பித்துவிட்டார். டுவிட்டரில் கணக்கு வைத்துக் கொண்டு அவ்வப்போது மொக்க விஷயங்களை எல்லாம் டுவீட் பண்ணும் சீனிவாசன், அண்மையில் ஒரு டுவீட் பண்ணி இருக்கிறார். அதைப் படித்தவர்கள் விலாநோக சிரித்திருப்பார்கள். அப்படி என்னத்த டுவீட் பண்ணி இருந்தார் பவர்?
நடிகை அமலாபால் திருமணத்துக்கு இவர் செல்லவில்லையாம். அது தொடர்பாக ஒரு செய்தியை டுவீட் பண்ணி இருக்கிறார் பவர்ஸ்டார். அதாவது, அன்புள்ள சிஸ்டர் அமலாபால், நீங்கள் என் மேல் கடும்கோபத்தில் இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். என்னை மன்னித்துவிடுங்கள், உங்கள் திருமணம் அன்று நான் ஷூட்டிங்கில் இருந்ததேன். அதனால்தான் வரமுடியவில்லை என்று டுவீட் பண்ணி இருக்கிறார் சீனிவாசன்.
இதில் என்ன வேடிக்கை தெரியுமா? அமலாபால் திருமணத்துக்கு பவர்ஸ்டாருக்கு அழைப்பே இல்லையாம்.