தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் டி.வியின் ஜோடி நம்பர் ஒன் சீசன் 7 இறுதிப் போட்டிக்கு சித்தார்த்துடன் தேர்வு பெற்றிருப்பவர் ப்ரியா. இறுதிப்போட்டியில் எப்படியும் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதற்கிடையில் சரவணன் மீனாட்சி தொடரிலும் நடித்து வருகிறார்.
சீசன் 7ல் ப்ரியாவின் நடனத்தை பார்த்துவிட்டு பல படங்களில் ஒரு பாட்டுக்கு ஆட அழைப்பு வந்ததாம். ஆனால் ப்ரியாதான் நேரம் இல்லை என்று கைவிரித்து விட்டார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
சரவணன் மீனாட்சியில் நடிப்பு, சீசன் 7ல் ஆட்டம் என்று பிசியாக ஓடிக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் ஒரு பாட்டுக்கு ஆடித் தரமுடியுமா என்ற நிறைய வாய்ப்புகள் வந்தது. சாரி... இப்போதைக்கு நேரம் இல்லை அப்புறம் பார்க்கலாம் என்று தவிர்த்து விட்டேன். நடனத்தை எங்கே ஆடினாலும் அது நடனம்தான். அதனால் சினிமாவில் ஆடுவதற்கு எனக்கு ஆட்சேபனை இல்லை. அதற்கான நேரம் வரும்போது அதுபற்றி யோசிப்பேன். என்கிறார் ப்ரியா.