ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஷங்கரின் உதவியாளர் கார்த்தி. ஜி. கிருஷ் இயக்கும் படம் கப்பல். வைபவ், சோனம் ப்ரீத் பாஜ்வா, கருணாகரன், வி.டி.வி.கணேஷ், ரோபாசங்கர் நடிக்கிறார்கள். "கப்பல் தலைப்பை பார்த்துவிட்டு இதனை சீரியசான படம் என்று நினைக்கிறார்கள். இது இரண்டரை மணி நேர முழு நீள காமெடிப் படம்" என்கிறார் கிருஷ். அவர் மேலும் கூறியதாவது:
நட்பு என்பது கடல் மாதிரி, நண்பர்கள் கப்பல் மாதிரி இதனை மூழ்காமலும், சாயாமலும் கொண்டு செல்வதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது. இதுதான் கப்பல் படத்தின் ஒண் லைன். 15 வயசுக்கு மேல் ஒவ்வொருத்தருடைய வாழ்கையை தீர்மானிக்கிறது நட்புதான். அந்த நட்பை தேர்ந்தெடுக்குறதுல கவனமா இருக்கணும். இவன் எனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிற பொசசிவ் மனப்பாண்மை நட்பிலும் உண்டு. அதைத்தான் காமெடியாக சொல்கிறோம். இரண்டரை மணி நேரம் சிரிக்கிறதுக்கும், இரண்டு நிமிடம் சிந்திக்கிறதுக்கும் உள்ளே விஷயம் வச்சிருக்கோம். என்கிறார் கிருஷ்.