பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில், தாம் தூம் படத்தில் நடித்த கங்கனா ரணாவத் அதன் பிறகு பாலிவுட்டிற்கு சென்று விட்டார். சில காலம் வாய்ப்பு இல்லாமல் அமெரிக்காவுக்கு சென்று விட்டார். அங்கு இயக்குனருக்கு படித்து விட்டு வந்தார். வந்தவுடன் படம் இயக்குவதுதான் அவரது திட்டமாக இருந்தது. ஆனால் இப்போது நடிப்புக்கு வாய்ப்பு மழை கொட்டுகிறது. கங்கனா ரணாவத் நடிப்பில் வெளிவர உள்ள ரிவால்வார் ராணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அடுத்து அவர் கஹானி படத்தின் இயக்குனர் சுஜாய் கோஸ் இயக்க இருக்கும் துர்கா ராணி சிங். படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மூளை வளர்ச்சியடையாத 14 வயது சிறுமிக்கும், அவளது தாய்க்கும் இடையே உள்ள உறவை சொல்லும் படம். இதில் கங்கனா 14 வயது பெண்ணின் தாயாக நடிக்கிறார். முதலில் இந்த கேரக்டரில் வித்யாபாலன் நடிப்பதாக இருந்தது. அவர் காஷ்சீட் ஒதுக்கி கொடுப்பதில் பிரச்னை இருந்ததால் இப்போது அவருக்கு பதிலாக கங்கனா நடிக்க இருக்கிறார். கங்கனா சமீபத்தில்தான் தனது 27வது பிறந் நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.