ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விஜய் டி.வி.ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. 2013ம் ஆண்டுக்கான சிறந்த நட்சத்திரங்களுக்கு விருது வழங்கும் விழா வருகிற ஜூலை 5ந் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில் பிரபல நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கவிஞர் வாலி, இயக்குனர் பாலுமகேந்திரா ஆகியோரை பெருமைப்படுத்தும் அம்சங்கள் இந்த ஆண்டு விழாவில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் குழுவில் நடிகை சிம்ரன், இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன். ஒளிப்பதிவாளர் ரவி. கே.சந்திரன், விமர்சகர் யூகி சேது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விருதுக்கான படப்பிடிப்பு பணிகளை கடந்த 10ந் தேதியே துவக்கி விட்டார்கள்.