பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய 'த்ரிஷ்யம்' படம் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தமிழில், கமல்ஹாசன் நடிக்க உள்ளார். ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை. கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடித்துள்ளார். தெலுங்கில் வெங்கடேஷ் நடித்துள்ளார். கன்னடம், தெலுங்கில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.
டீன் ஏஜ் வயதில் உள்ள இரண்டு மகள்களுக்கு அப்பாதான் இந்த படத்தின் நாயகன். அம்மாதான் படத்தின் நாயகி. மலையாளத்தில் மோகன்லாலும், மீனாவும் மிகவும் பொருத்தமாக நடித்து அனைத்து ரசிகர்களின் பாராட்டையும் பெற்றனர். மற்ற மொழிகளில் இதற்குப் பொருத்தமான நடிகரைத் தேர்வு செய்து கொஞ்சம் கடினமாக இருந்ததாம். ஏனென்றால், இரண்டு மகள்களுக்கு அப்பாவாக நடிக்க யார் முன் வருவார்கள் என்பது சந்தேகமாக இருந்ததாம்.
தெலுங்கில் படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் கமல்ஹாசனிடம் இது பற்றி பேசிக் கொண்டிருந்த போது, அவர்தான் தெலுங்கில் வெங்கடேஷ் நடித்தால் நன்றாக இருக்கும், அவரிடம் பேசுங்கள் என்று சொல்லியிருக்கிறார். கமல்ஹாசன், சிபாரிசு செய்த விஷயத்தை வெங்கடேஷிடமும் சொல்லியிருக்கிறார்கள். அவர் சொன்னால் சரியாக இருக்கும் என வெங்கடேஷும் நடிக்க சம்மதித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் தெலுங்கின் வெற்றிகரமான ஜோடியான வெங்கடேஷும், மீனாவும் மீண்டும் இந்த படம் மூலம் இணைந்து நடித்துள்ளார்கள். இதுவே படத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளதாம். ஸ்ரீப்ரியா இயக்கியுள்ள இந்த படம் அடுத்த மாதம் தெலுங்கில் வெளியாக உள்ளது.