ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றி ஹாலிவுட்டில் நிறைய திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. தமிழில் சூர்யா நடிப்பில் மாற்றான், கன்னடத்தில், பிரியாமணி நடிப்பில் சாருலதா போன்ற படங்கள் வெளிவந்துள்ளன. தற்போது ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் பற்றிய இந்திப் படம் ஒன்றை பூஷன் படேல் என்ற இயக்குனர் உருவாக்குகிறார். இந்தப் படத்தில் பிபாசாபாசு ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளாக நடிக்கிறார். படத்திற்கு அலோன் என்று தற்போது தலைப்பு வைத்திருக்கிறார். இது ஒரு தாய்லாந்து படத்தின் தழுவல். ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றிய நிறைய திரைப்படங்கள் டாக்குமெண்டரிகளை பார்த்து பிபாசா நடிக்க பயிற்சி எடுத்து வருகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.