டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி ஹிட்டான படம் சுவாமி ரா ரா. நிகில் சித்தார்த், சுப்பிரமணியபுரம் ஸ்வாதி நடித்திருந்தனர். சுதிர்வர்மா இயக்கி இருந்தார். 100 மில்லியன் மதிப்புள்ள ஒரு விநாயகர் சிலை திருடப்பட்டு பல்வேறு கைகளுக்கு பல்வேறு விலைமதிப்புகளுடன் செல்லும், அது பிக்பாக்கட் திருடனான ஹீரோ கைக்கு வரும்போது என்ன நடக்கிறது என்பதை காமெடியாக சொல்லி சிரிக்க வைக்கிற கதை.
இந்தப் படம் இப்போது தமிழில் சாமியாட்டம் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. நிகில் சித்தார்த் நடித்த கேரக்டரில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார், சுவாதி கேரக்டரில் மும்பை மாடல் அழகி ஒருவர் நடிக்கிறார். தெலுங்கில் நடித்த பூஜாவும், ஜீவாவும் அதே கேரக்டரில் நடிக்கிறார்கள். யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற ரீமேக் படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இதனை இயக்குகிறார். பாபு யோகேஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை தயாரிப்பது ஹீரோ ஸ்ரீகாந்த்.