ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திருக்குமரன் எண்டர்டயின்மெண்ட் நிறுவன சேர்மன் சி.வி.குமாருக்கு இணை தயாரிப்பாளராக இருந்து அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் படங்களை தயாரித்த சுந்தர் தற்போது டைம் லைன் சினிமாஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி தனியாக படம் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அட்டக்கத்தி தினேஷ் ஹீரோ. அவருடன் காளி, வேலா, ராமமூர்த்தி, கலையரசன், டேனியல் என அட்டகத்தி, பீட்சா டீம் நடிக்கிறார்கள். ஜி.மணிகண்டன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பூஜையில் சி.வி.குமார், ஞானவேல்ராஜா, அட்டகத்தி ரஞ்சித், பி.ரமேஷ், பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். படத்திற்கு டைட்டிலும் வைக்காமல் ஹீரோயினும் முடிவு பண்ணாமல் படப்பிடிப்பு தொடங்கி விட்டது.