மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
மோகன்லால், மீனா நடித்த சூப்பர் ஹிட் மலையாள படமான த்ரிஷ்யத்தில் வில்லனாக நடித்தவர் ரோஷன். மோகன்லால் மகளை செல்போனில் படம் எடுத்து அவரை பலாத்தாரம் செய்ய முயற்சித்து கொலையாகும் கேரக்டரில் நடித்திருந்தார். த்ரிஷியத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அதே கேரக்டரில் நடித்து வருகிறார். தெலுங்கு, மலையாளத்தில் வில்லனாக நடித்த ரோஷன் தமிழில் ஹீரோவாக நடிக்கிறார்.
கருணாஸ் நடித்த சந்தமாமா படத்தை இயக்கிய ராதாகிருஷ்ணன் இயக்கும் குபேரராசி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ரோஷன். காதல், மோதல், கலந்த காமெடி படம்.
"மலையாளத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருந்தாலும் த்ரிஷ்யம்தான் எனக்கு அடையாளம் கொடுத்தது. தற்போது தெலுங்கிலும் அதே கேரக்டரில் நடிக்கிறேன். இந்த நேரத்தில்தான் எனக்கு தமிழ் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழில் நல்ல நடிகர் என்று பெயர் வாங்குவேன். நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் வில்லனாகவும் நடிப்பேன்" என்கிறார் ரோஷன்.