பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினிமாவைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் வந்த தனுஷ், இன்று நடிப்பில் பிச்சு உதறுகிறார். அதுபோலவே படத்தயாரிப்பு பற்றி ஒன்றும் தெரியாமலே படம் தயாரிக்க ஆரம்பித்தவர் இன்று வியாபாரத்தில் கரைகண்டவராகிவிட்டார். 3 படத்தில் தன்னுடன் காமெடி வேடத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு தியேட்டரில் கைதட்டல் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அவரை ஹீரோவாக வைத்து எதிர்நீச்சல் படத்தைத் தயாரித்து பல கோடி லாபம் பார்த்தார்.
எதிர்நீச்சல் படம் வெற்றியடைந்ததும் அதே கூட்டணியை வைத்து டாணா படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். படத்துக்கு பூஜை போடுவதற்கு முன்பே டானாவை பிசினஸ் பண்ணி 10 கோடிக்கு மேல் லாபம் பார்த்தார். இதே ரூட்டில், விஜய்சேதுபதியை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க திட்டமிட்டார் தனுஷ். உதயநிதியின் மனைவி கிருத்திகாவை இயக்குநராக கமிட் பண்ணினார். பட வேலைகள் நடைபெற்று வந்தநிலையில் விஜய்சேதுபதி அப்படத்திலிருந்து விலகிவிட்டார். காரணம் மிக குறைவான சம்பளம் தருவதாக சொன்னாராம் தனுஷ். ஸாரி சொல்லிவிட்டார் விஜய்சேதுபதி.