Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னர் - சங்கர் சூட்டிங்கை ரசித்து பார்‌த்த முதல்வர்

01 ஏப், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

இன்று காலை பொன்னர் சங்கர் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த முதல்வர் கருணாநிதி சுமார் 1 மணி நேரம் சூட்டிங்கை ரசித்து பார்த்தார். முதல்வர் கருணாநிதி வார இதழ் ஒன்றில் எழுதிய பொன்னர் - சங்கர் என்ற வரலாற்று கதைதான் பொன்னர் - சங்கர் படத்தின் கதை. நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் தயாரித்து இயக்கும் இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் பொன்னர் மற்றும் சங்கர் ஆகிய இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார். மத்திய அமைச்சர் நெப்போலியன் தலையூர் காளி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிர சத்யராஜ், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், பொன்வண்ணன், ரியாஸ்கான், மனோரமா, பிரபு, சினேகா, குஷ்பு, அம்பிகா, சீதா உள்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் சூட்டிங் வடபழனியில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் ‌விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சூட்டிங்கை பார்ப்பதற்காக முதல்வர் கருணாநிதி இன்று காலை 9.30 வரவிருப்பதாக பொன்னர் சங்கர் குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி சரியாக 9.30 மணிக்கு ஸ்டூடியோவுக்குள் முதல்வர் வந்தார். அங்கு பிரசாந்த், ஜெயராம், சினேகா, குஷ்பு, ரியாஸ்கான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் மேக்கப் போட்டுக் கொண்டு நடிப்பதற்கு தயாராக இருந்தனர். முதல்வரை பார்த்ததும், அனைவரும் முதல்வரிடம் மரியாதை நிமித்தமாக சென்று பேசி, நலம் விசாரித்தனர். முதல்வர் கருணாநிதியும் அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் சூட்டிங் தொடங்கியது. சூட்டிங்கை சுமார் 1 மணி நேரம் முதல்வர் கருணாநிதி ரசித்து பார்த்தார். பிரசாந்த்தை அழைத்து உண்மையிலேயே படைவீரன் போல இருக்கிறாய்.... என பாராட்டிய முதல்வர், சில பிழைகளையும் திருத்தினார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முதல்வரின் வருகையால் பொன்னர் சங்கர் சூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு நிலவியது. முதல்வருடன் ஜே.கே.ரித்தீஷ், நெப்போலியன் உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

GOWSALYA - Denhelder,நெதர்லாந்து
17 ஏப், 2011 - 01:23 Report Abuse
GOWSALYA பொன்னர் சங்கர் கதையையே தலைகீழா மாற்றிக் கொண்ட கருணாநிதி,அதையும் பார்த்து ரசிக்கப் போனாரா????..வெட்கமா இல்லை??????
Rate this:
Tamilanban - Lisbon,போர்ச்சுகல்
16 ஏப், 2011 - 11:35 Report Abuse
 Tamilanban திரு. குமார் அவர்களே.. எதை கண்டு நீங்கள் இதை கற்பனை வரலாறு என்கிறீர்கள்? பொன்னர் சங்கர் வாழ்ந்ததற்கான குறியீடுகள், கோட்டை, போர் புரிந்த இடங்கள் என திருச்சி, கரூர் மாவட்டங்களில் இன்றும் காணக்கூடிய சான்றுகள் உண்டு... Cambridge பல்கலை கழகத்தில் இந்த வீரவரலாறு பற்றிய ஆய்வு கட்டுரைகள் உண்டு..
Rate this:
ரவி sankar - paramakuti,இந்தியா
06 அக், 2010 - 20:25 Report Abuse
 ரவி sankar THALAIVA APPA VELIVARUM
Rate this:
christ - chennai,இந்தியா
15 செப், 2010 - 12:34 Report Abuse
 christ தமிழ் நாட்டுல எவ்ள்ளவு பிரச்சன்னைகல் இருக்கு ? ஒரு ரோடு சரி கெடயாது சினிமாக்கு முக்கேயதுவம் குடுக்கறதுக்கு பதில் பொது மக்கள் பிரச்னைகள் நேரில் கண்டு (வருவது அதிகாரிகலுக்கு குட தெரிய கூடாது )சரி பண்ணலாமே?
Rate this:
bakrudeen - qatar,இந்தியா
19 ஜூலை, 2010 - 20:41 Report Abuse
 bakrudeen ponnar sangar aanda bomi valanadu ,mannapparai , ana suting yedukkum ediam vadapalani
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in