பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'குத்து' ரம்யா என, தமிழ் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் திவ்யாவுக்கு, திடீரென அரசியல் ஆசை வந்து, கடந்தாண்டு நடந்த இடைத் தேர்தலில், கர்நாடகா மாண்டியா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். அதில், வெற்றி கிடைத்ததால், படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். ஆனால், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், அதே தொகுதியில் போட்டியிட்ட அவருக்கு, தோல்வி தான் கிடைத்தது. இதனால், மனம் உடைந்துள்ள ரம்யா, ஆன்மிகத்தைநாடத் துவங்கியுள்ளார். மும்பையில் உள்ள தியான பயிற்சி மையத்துக்கு சென்று, 10 நாள் தங்கியிருந்து, தியானம் செய்துள்ளார். மவுன விரதமும் கடைபிடிக்கிறாராம்.