இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சசிகுமார் தயாரிப்பில் பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். எத்தனையோ முன்னணி நடிகைகள் இருக்க, வரலட்சுமிக்கு பாலா படத்தின் நாயகி வாய்ப்பு கிடைக்க இரண்டு காரணங்கள். ஒன்று..விஷாலின் சிபாரிசு. மற்றொன்று..அவரது தொப்பை. தாரை தப்பட்டை படத்தின் கதாநாயகி கரகாட்டம் ஆடுபவர். கரகாட்டம் ஆடுபவர்களுக்கு தொப்பை இருந்தால் யதார்த்தமாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே வரலட்சுமிக்கு சான்ஸ் கொடுத்தார் பாலா.
வரலட்சுமி, சசிகுமார் ஆகியோரை வைத்து கடந்த மாதம் டெஸ்ட் ஷூட் எடுத்தார் பாலா. அவற்றைப் பார்த்த பாலாவுக்கு வரலட்சுமிக்கு வயிறு அளவுக்கு மீறி பெரிதாக இருப்பதாக தோன்றியதாம். உடனே வரலட்சுமியை அழைத்து, தினமும் கடும் உடற்பயிற்சி செய்து எடையைக் குறைக்க வேண்டும், முக்கியமாக தொப்பை இன்னும் குறைய வேண்டும் என்று கட்டளையிட்டாராம் பாலா. அதோடு, பார்ட்டிகளுக்கு செல்லக் கூடாது அப்படியே சென்றாலும் கிளாஸை தொடக்கூடாது என்றும் எச்சரிகை செய்தாராம். பாலாவின் அறிவுரைப்படி கடும் உடற்பயிற்சி செய்து பனிரெண்டு கிலோ எடையைக் குறைத்திருக்கிறார் வரலட்சுமி.