மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேசுவேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு நடிகை குஷ்பு வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார். குஷ்புவின் இந்த பேட்டி தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமானது என எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை ரத்து செய்யக்கோரி குஷ்பு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இவ்வழக்கு விசாரணை முடிவில் கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், குஷ்பு பேசியதில் தவறே இல்லை. மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், என்று கூறியிருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் நீதிபதிகளின் இந்த கருத்து பற்றி நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்கு போராட காரணமே, எனது மகள்களுக்கு நான் மனஉறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதை காட்டுவதற்காகத்தான், என்று கூறியுள்ளார்.