வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
கமல்ஹாசன் நடித்து வரும் உத்தம வில்லன் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இதில் ஆண்ட்ரியா, பூஜா குமார், பூ, மரியான் புகழ் பார்வதி மேனன் நடிக்கிறார். இவர்களோடு இன்னொரு மலையாள நடிகையான பார்வதி நாயரும் நடிக்கிறார். இருவருக்கும் ஒரே பெயர் என்பதால் இவரது காட்சியை அவருக்கும், அவரது காட்சியை இவருக்கும், மாற்றி சொல்லிவிடுகிறார்களாம் உதவியாளர்கள். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டதாம். அதனால் இயக்குனர் ரமேஷ் அரவிந்த், பார்வதி என்பதை விட்டுவிட்டு நாயர், மேனன் என்றே இருவரையும் குறிப்பிடச் சொன்னாராம்.
"நானும் பார்வதி மேனனும் நல்ல பிரண்ட். ஆனாலும் இந்த பெயர் குழப்பம் ரொம்ப நாளாகவே இருக்கிறது. இவரும் ஒரே மாதிரி உடை அணிந்து பேஸ்புக்கில் போட்டோம், இருவரும் அக்கா தங்கையா என்று எல்லோரும் கேட்டார்கள் அது எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது. இருந்தாலும் எனது பெயரில் சிறிது மாற்றம் செய்யலாமா" என்று யோசித்து வருகிறேன் என்கிறார் பார்வதி நாயர்.