தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பின்னணி பாடகர்கள், பின்னணி பாடகிகள் நடிக்க வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பாடகர் கிரிஷ் ஒரு படத்தில் கதாநாயகனாகவே நடித்து வருகிறார். அவரைத்தொடர்ந்து பிரபல பின்னணி பாடகி உஜ்ஜைனி ராய், 'எவன்' என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். வளையப்பட்டி தவிலு, ரிங்கா ரிங்கா, நீ மர்லின் மன்றோ உட்பட ஏராளமான பாடல்களை பாடியவர் இவர்.
உஜ்ஜைனி ராய் நடிப்பது கதாநாயகி வேடத்தில் அல்ல, கதாநாயகனுக்கு அம்மா வேடத்தில். என்னது அம்மா வேடத்திலா? “வழக்கமாக காதலனும், காதலியும் சேர்வதற்குத்தான் பெரிய போராட்டமே நடைபெறும். ஆனால், இந்த படத்தில் ஒரு தாயும், மகனும் சேர்வதற்குக் காதலி படும் கஷ்டங்கள்தான் படத்தின் கதை. அந்தளவுக்கு இந்தப் படத்தில் உள்ள அம்மா வேடம் பவர்ஃபுல்லானது. அதனால்தான் அந்த வேடத்தில் உஜ்ஜைனி ராயை நடிக்க வைத்தோம்” என்கிறார் எவன் படத்தின் இயக்குநர் கே.எம். துரைமுருகன். இவர் தயா, போஸ், கருப்பசாமி குத்தகைதாரர், கோலி சோடா ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.
புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி 'இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு அம்மாவாத்தான் உஜ்ஜைனிராய் நடிக்கிறார்.