இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சிம்பு - பாண்டிராஜ் முதன்முதலாக இணைந்துள்ள படம் ''இது நம்ம ஆளு''. பலவருட இடைவெளிக்கு பிறகு சிம்பு-நயன்தாராவை இந்தப்படத்தின் மூலம் இணைத்துள்ளார் பாண்டிராஜ். இதுவே படத்திற்கு பெரிய பப்ளிசிட்டியாக உள்ளது. மேலும் இந்தப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஆரம்பத்தில் வேகமாக வளர்ந்து வந்த படப்பிடிப்பு பின்னர் தொய்வடைந்தது.
இந்நிலையில் ஒரு வழியாக இழுத்து பிடித்து, 'இது நம்ம ஆளு' படத்தின் ஷூட்டிங்கை இறுதிகட்டத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பாடல் காட்சிகள் அங்கு இருக்கும் குளக்கரை, மற்றும் முக்கிய இடங்களில் படமாகி வருகிறது. சிம்பு தம்பி குறளரசன் இசையில் பதிவான பாடலுக்கு, சிம்பு-நயன்தாரா இருவரும் செமத்தியான ஆட்டம் போட்டுள்ளனர்.