'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுமார் 25 படங்களை இயக்கியவர் இயக்குநர் மனோஜ்குமார். இவற்றில் சில வெற்றிப்படங்களும், பல தோல்விப்படங்களும் அடக்கம். இயக்குநராக இருந்து சினிமாவில் சம்பாதித்து தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். சினிமாவில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு சொந்த ஊரில் நிலபுலன்கள், சென்னையில் பல சொந்த வீடுகள் என செமத்தியாய் செட்டிலானார். அப்படியும் அவருக்கு திருப்தியில்லை. நம்மால் ஷங்கர் ரேன்ஜுக்கு வர முடியவில்லையே...அப்படி வர என்ன செய்யலாம் என்று ஒரு ஜோசியக்காரரிடம் கையை நீட்டி உள்ளார்.
ஜோசியக்காரரோ...உங்கள் பெயரில்தான் பிரச்சனை...வெற்றியைக் குறிக்கும் வகையில் உங்கள் பெயருக்கு முன்னால் விஜய என்ற பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று ஆலோசனை சொல்லி இருக்கிறார். அவர் சொன்னபடி விஜய மனோஜ்குமார் என்று பெயரை மாற்றிக் கொண்டு உயிருக்கு உயிராக என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார். படம் முடிந்து இரண்டு வருடங்களாக பெட்டியிலேயே முடங்கிக் கிடந்தது. முட்டிமோதிப் பார்த்தும் விமோசனம் கிடைக்கவில்லை. பெயரை மாற்றிய பிறகு மேலும் சிக்கலாகிவிட்டதே என்று வெறுத்துப்போன விஜய மனோஜ்குமார், பெயரில் ஒட்டிக்கொண்டிருந்த விஜயத்தை கழற்றிவிட்டுவிட்டு மீண்டும் மனோஜ்குமார் ஆகிவிட்டார்!