ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா, 'வணக்கம் சென்னை' படத்தை இயக்கினார். இதனை அவரது கணவர் உதயநிதியே தயாரித்தார். கிருத்திகாவின் இரண்டாவது படத்தை தயாரிக்கப்போவது தனுஷ். இசை அமைக்கப்போவது வழக்கம்போல் அனிருத்.
இதுபற்றி கிருத்திகா கூறியிருப்பதாவது: என்னோட முதல் படம் ரொமாண்டிக் காமெடியாக இருந்தது. இரண்டாவது படம் உணர்வுபூர்வமான குடும்ப கதை. இந்தக் கதையை சதாரணமாகத்தான் தனுஷிடம் சொன்னேன். நானே தயாரிக்கிறேன் என்று சொன்னார். இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தனுஷ் எனது நல்ல நண்பர் என்பதற்காக தயாரிக்கவில்லை, கதை பிடித்திருந்ததால்தான் தயாரிக்கிறார்.
இப்போதைக்கு அனிருத் மட்டுமே முடிவு செய்யப்பட்டிருக்கிறான். மற்ற டெக்னீஷியன்கள், நடிகர் நடிகைகள் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படுவார்கள். விஜய்சேதுபதி நடிப்பதாக செய்திகள் வந்திருக்கிறது. நான் இன்னும் இது தொடர்பாக அவரைச் சந்திக்கவில்லை. எனவே எதையும் உறுதியாக கூறமுடியாது என்கிறார் கிருத்திகா.