இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
அதிகம் கிசுகிசுக்கப்படாத இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா. பிரபு தேவாவின் படங்களில் தொடர்ந்து நடித்ததால் இருவரையும் இணைத்து ஆரம்பத்தில் கிசுகிசு வந்தது. அதனை இருவருமே பலமாக மறுத்தனர். இப்போது சோனாக்ஷி மற்றும் சித்தார்த் மல்கோத்ரா நெருக்கம்தான் லேட்டஸ்ட் ஹாட் நியூஸ். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்கிறார்கள். நண்பர்களின் விருந்துக்கு சேர்ந்தே வருகிறார்கள்.
சமீபத்தில் சோனாக்ஷி தன் பிறந்த நாள் பார்டிக்கு சித்தார்த்தை மட்டுமே அழைத்துள்ளார். இருவரும் பிரபலமான இரவு பார்ட்டி ஓட்டல் ஒன்றில் சந்தித்து விடிய விடிய பிறந்த நாளை கொண்டாடி தீர்த்திருக்கிறார்கள். இருவரும் இதுவரை ஒரு படத்தில்கூட சேர்ந்து நடிக்கவில்லை. விரைவில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பரபரப்பாக வெளியாகி இருக்கும் இந்த செய்தியை இருவருமே இதுவரை மறுக்கவில்லை.