ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் முக்கிய காமெடியனாக சந்தானம் நடிக்கிறார். ரஜினியுடன் அவர் இணைந்து நடிக்கும் காட்சிகள் நிறையவே உள்ளதாம். அதோடு காமெடியை இன்னும் ஒர்க்அவுட் செய்ய நினைத்த கே.எஸ்.ரவிக்குமார் இப்போது, இன்னொரு காமெடியனாக கருணாகரனை படத்தில் இணைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு விஜயசேதுபதி நடித்த சூதுகவ்வும் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் கருணாகரன். காசு பணம் துட்டு மணி மணி என்ற பாடலில் நடனமாடியிருந்தார். அதையடுத்து, சமீபத்தில் கிருஷ்ணா நடிப்பில் வெளியான யாமிருக்க பயமே படத்திலும் கிருஷ்ணாவுக்கு இணையான வேடத்தில் இவரும் நடித்திருந்தார்.
ஆக, கருணாகரன் நடிக்கிற படங்களெல்லாமே இப்போது ஹிட்டடித்து வருவதால், ராசியான நடிகராகியிருக்கும் இவரது கையில் தற்போது அரை டஜனுக்கும் மேலான படங்கள் உள்ளன. இந்த நிலையில, ரஜினியின் லிங்கா படவாய்ப்பும் கிடைத்திருப்பதால், அடுத்த லெவலுக்கு சென்று விட்டார் கருணாகரன். இந்த படத்தில் கிடைத்தது தன்னைப்பொறுத்தவரை அரிய வாய்ப்பு என்பதால், வேறொரு படத்திற்கு கொடுத்திருந்த கால்சீட்டை லிங்காவுக்கு வாங்கிக்கொடுத்து நடிக்கிறார் கருணாகரன்.