சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
கோச்சடையான் படத்தில் ரஜினியின் அனிமேஷன் தோற்றத்தை பலரும் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த நேரத்தில், ரஜினியின் மார்பு ரொம்ப நன்றாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் அதை பெருசுபடுத்தி கெடுத்து விட்டார்கள் என்று ஒரு கருத்தை சொல்லி ரஜினி ரசிகர்களின் எதிர்ப்புக்கு ஆளானார் இயக்குனர் ராம்கோபால்வர்மா. அந்த சர்ச்சையே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் இப்போது மோடியின் பதவி ஏற்பு விழாவைப்பற்றியும இன்னொரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் அவர். அதில், மோடியின் பதவி ஏற்பு விழா, அரசியல் விழா மாதிரி தெரியவில்லை. சினிமா விழா போல் இருந்தது. அந்த அளவுக்கு சினிமா உலக கலைஞர்கள்தான் அதிகமாக கலந்து கொண்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சோனியாவின் மகளை விட நவாஸ் ஷெரீப்பின் மகள்தான் கவர்ச்சிகரமாக உள்ளார் என்றும் இன்னொரு டுவிட் செய்துள்ளார். அவரது இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சைகளையும், கண்டனங்களையும் உருவாக்கியிருக்கிறது.