தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அழகு மற்றும் திறமையுடன் தமிழ் சினிமாவுக்கு வந்து அறிமுகமாகி படம் வெற்றி பெறாததால் திரும்பிச் சென்ற நடிகைகள் நிறைய உண்டு. ரிச்சா கங்கோபாத்யாயா, பிரணிதா இப்படி சில நடிகைகள் அப்படிச் சென்றவர்கள். அவர்களில் ஒருவர்தான் தீக்ஷா சேத். தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த தீக்ஷா தமிழில் ராஜபாட்டை படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் தோல்வி அடையவே மீண்டும் தெலுங்கிற்கே சென்று விட்டார்.
இப்போது லெஹர் ஹம் தீவானா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்குச் சென்று விட்டார். அர்மான் ஜெயினுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆரிப் அலி இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகி உள்ளது. காதலர்கள் இருவர் மோட்டார் சைக்கிளிலேயே ஊரைச் சுற்றும் கதை. ரொமாண்டிக் காமெடி டிராமா வகையைச் சேர்ந்தது. அடுத்த மாதம் 4ந் தேதி ரிலீசாகிறது.
அனுஷ்கா, சமந்தா தமிழிலிருந்து விலகிச் சென்று பிறகு யு டேர்ன் அடித்து திரும்பியது போன்று தீக்ஷாவும் கோடி சம்பளம் பெறும் நடிகையாக தமிழுக்கு திரும்பி வரலாம்.