இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நான் படத்தையடுத்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள படம் சலீம். இன்னும் சில வாரங்களில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் ஒரு பாடல் காட்சியின் தொடக்கத்தில் ஒரு கழுகு பறந்து செல்லும். அதைப்பார்த்த சிலர் ஏதாவது செண்டிமென்டுக்காக கிராபிக்சில் அந்த கழுகை உருவாக்கியிருப்பதாக பேசிக்கொணடார்களாம்.
ஆனால் விஜய் ஆண்டனியிடம் எதற்காக இந்த கழுகு செண்டிமென்ட்? என்று கேட்டால், செண்டிமென்டெல்லாம் எதுவும் இல்லை. நாங்கள் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த பகுதியில் ரொம்ப நேரமாக அந்த கழுகு ஒரு மரத்தில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. ஆள் நடமாட்டமும், மனிதர்களின் சத்தமும் அதிகரித்ததால் அதுவாக சென்று விடும் என்று நினைத்தோம் ஆனால் அது படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பது போலவே மரத்தில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருநதது.
அதனால், பின்னர் அதைப்பொருட்படுத்தாமல் நாங்கள் வேலையை தொடங்கி விட்டோம். ஆனால், முதலில் ரிகர்சல் பார்த்தபோது அமர்ந்திருந்த அந்த கழுகு, ஓகே டேக் பதிவானபோது, மரத்தில் இருந்து பறந்தது. அதைப்பார்க்கையில் நாங்கள் திட்டமிட்டு அதை படமாக்கியது போல்தான் தெரியும். ஆனால் அது எதேச்சையாக நிகழ்ந்ததுதான். மற்றபடி, கழுகு வரும்போது படமாக்க வேண்டும் என்கிற செண்டிமென்ட் எதுவும் இல்லை என்றார் விஜய்ஆண்டனி.