ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற நேயர்களுடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விட்டுத் திரும்பி இருக்கிறார் பாவனா. அங்கு பல்வேறு இடங்களில் நிகழ்ச்சியும் நடத்தியிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியா பயணம் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது. இன்னொரு நாட்டில் வாழும் மக்கள் நம்மையும், நம் நிகழ்ச்சிகளையும் இந்த அளவுக்கு கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. நாங்களும் நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களை மகிழ்வித்தோம். சிட்னி, மெல்பர்ன், நகரங்களுக்கு சென்றோம். அங்கும் நிகழ்ச்சிகள் நடத்தினோம். ஆஸ்திரேலியா சென்றதன் நினைவாக ஒரு கங்காரு பொம்மையை வாங்கி வந்து வீட்டில் பத்திரமாக வைத்திருக்கிறேன். என்கிறார் பாவனா.